ஊரடங்கு உத்தரவு : மக்கள் நடமாட்டம் 77%குறைவு – கூகுள் அறிக்கை

சீனாவை தொடர்ந்து, பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. இந்த வைரஸால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், இதனை தடுப்பதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இதனையடுத்து, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் உத்தரவையும் மீறி வெளியில் நடமாடி வருகின்றனர். இந்நிலையில், கூகுள் நிறுவனம் தங்களது தரவுகளை பயன்படுத்தி மக்கள் நடமாட்டம்  77% குறைந்துள்ளதாகவும், மளிகைக்கடை மற்றும் மருந்தகங்களில் 65% குறைந்துள்ளதாகவும் கூகுள் நிறுவனம் அறிக்கை இந்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல்களை அளித்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.