30 C
Chennai
Thursday, October 21, 2021

Breaking:திமுக எம்.பி.க்கு அக்.13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் ..!

திமுக எம்.பி.ரமேஷ் அவர்களுக்கு வருகின்ற அக்.13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராஜ் மரணம் தொடர்பாக எம்பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு,நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து,இன்று எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனையடுத்து,”நான் உயிரினும் போற்றும் தலைவர் ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் எனக் கருதி சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்துள்ள வழக்கில் நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று சரணடைந்தது குறித்து எம்பி ரமேஷ் கடிதம் வாயிலாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில்,முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்பி ரமேஷ் அவர்களுக்கு வருகின்ற 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து  பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து,நீதிமன்ற காவல் முடிந்ததும்,எம்பி ரமேஷ் அவர்கள் கடலூர் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,இந்த வழக்கு அடுத்தகட்ட நகர்வை நோக்கி செல்லும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

spot_imgspot_img

Hot Topics

Read More