37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

ஏலத்தில் கோடிக்கணக்கில் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர் பென் ஸ்டோக்ஸ் தாயகம் திரும்பினார்.!

சிஎஸ்கே அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

ஏலத்தில் கோடிக்கணக்கில் சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், தேசிய அணியில் விளையாடுவதற்காக சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் ப்ளே ஆஃப்பில் சிஎஸ்கே அணிக்காக விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.  இந்த சீசனில் அவர் சென்னை அணிக்காக 2 மேட்ச்சுகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

அடுத்த முறை உங்களைச் சந்திக்கும் வரை நாங்கள் உங்களுக்காக விசில் அடிப்போம் என்று சிஎஸ்கே நிர்வாகம் ட்வீட் செய்தது. பென் ஸ்டோக்ஸ் தற்போது விலகியுள்ள நிலையில், சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஸ்டோக்ஸ் இந்த சீசனின் 2 போட்டிகளில் விளையாடி 15 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

இவரை தங்கள் அணியில் வாங்கிட வேண்டும் என அனைவரும் போட்டி போட்டு இறுதியில் சிஎஸ்கே அணி ரூ. 16.25 கோடிக்க வாங்கியது. காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் அணியில் இடம்பெற்ற போதிலும் அவர் போட்டிகளில் விளையாடவில்லை.

இருப்பினும், அவர் இல்லாமலையே சென்னை அணி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ப்ளே ஆஃப் குவாலிஃபையர்  நுழைந்துள்ளது. ஆனால்,  இந்த முக்கியமான தருணத்தில் பென் ஸ்டோக்ஸ், சி.எஸ்.கே அணியை விட்டு செல்வது சி.எஸ்.கே.ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியயும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.