“Yenna Sonna, CSK!” வெளியானது சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் புதிய Anthem பாடல்!

“Yenna Sonna, CSK!” வெளியானது சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் புதிய Anthem பாடல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய Anthem பாடலுக்கு YennaSonna (என்ன சொன்ன) என்று தலைப்பிட்டுள்ள நிலையில், இதனை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே தொடர், ஐபிஎல். இந்த தொடரில் மொத்தமாக 8 அணிகள் உள்ள நிலையில், உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்ட ஒரே அணி, சென்னை சூப்பர் கிங்ஸ். தல தோனி கேப்டன்ஷிப்பில் இயங்கிவரும் இந்த அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அசுர பலத்தில் உள்ளது. தல தோனி, சின்ன தல ரெய்னா,டு ப்ளஸிஸ், உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்த அணியில் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்கனவே “Whistle Podu” என்று ஒரு Anthem பாடல் இருக்கும் நிலையில், தற்பொழுது என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய அறிவும், மாஸ்டர் படத்தில் “Master the Blaster” பாடலை பாடிய பி ஜான், சென்னை அணிக்கு புதிய Anthem பாடலை பாடியுள்ளார்கள். இந்த பாடலுக்கு YennaSonna (என்ன சொன்ன) என்று தலைப்பிட்டுள்ள நிலையில், இதனை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். இதோ அந்த பாடல்….

Join our channel google news Youtube