ஃபாப் டுப்ளிஸிஸை சி.எஸ்.கேவில் தக்கவைக்க முயற்சி எடுப்போம்.! – CSK நிர்வாகி.!

ஃபாப் டுப்ளிஸிஸை ஏலத்தில் எடுக்க கண்டிப்பாக முயற்சிப்போம். ஆனால், எதுவும் நம் கையில் இல்லை என சிஎஸ்கே அணி நிர்வாகி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஐபிஎல் 2022க்கான கொண்டாட்டம் தற்போதே ரசிகர்கள் மத்தியில் தொடங்கிவிட்டது. ஏற்கனவே அணிகள் தங்கள் டீமில் ஏற்கனவே விளையாடி வந்த வீரர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களை தக்கவைத்துள்ளது. அதில் டீம்கள் யாரை விடுவது யாரை எடுப்பது என திணறி ஒரு வழியாக அனைத்து டீம்களும் வீரர்களை தக்கவைத்துள்ளனர்.

அதில், நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அணி நிர்வாகமானது, கேப்டன் தோனி, ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் ஆகியோரை தக்கவைத்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா, ஃபாப் டுப்ளிஸிஸ் ஆகியோரை அணி நிர்வாகத்தினரால் எடுக்க முடியவில்லை. 4 வீரர்களை தான் தக்க வைக்க முடியும் என்பதால்,

கடந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரராக ஃபாப் இருந்தார். மேலும், பீல்டிங்கில் மற்ற அணிகளுக்கு அதிக ரன்கள் கொடுக்காமல் பீல்டிங் எல்லை சாமி போல அசத்தியிருந்தார். அதனால், அவரை எடுக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

இந்நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகி காசி விஸ்வநாதன் கூறுகையில், முடிந்த வரையில் ஃபாப் டுப்ளிஸிஸை ஏலத்தில் எடுக்க முயற்சிப்போம். மீண்டும் ஒரு தக்கவைக்கும் வாய்ப்பு இருக்காதா என ஏங்குகிறோம். எதுவும் நம் கையில் இல்லை என்பது போல தெரிவித்தார்.

அதனால், கண்டிப்பாக டுப்ளிஸைஸை ஏலத்தில் கண்டிப்பாக சிஎஸ்கே எடுத்துவிடும் என்கிற நம்பிக்கையில் ரசிகர்கள் ஏலத்தை எதிநோக்கி காத்திருக்கின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.