ஹேக்கர்களால் முடக்கப்பட்ட கிரிப்டோகரன்சி..!! பரிமாற்றத்தை நிறுத்தியது பினான்ஸ்..!!

பிரபல கிரிப்டோ பரிமாற்ற செயலியான பினான்ஸ் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக  அதன் செயல் அதிகாரி சாங்பெங் ஜாவோ தெரிவித்துள்ளார்.

இந்த தற்காலிக நிறுத்தமானது Ankr மற்றும் Hay போன்ற டெக்னாலஜி மீதான தாக்குதலை அடுத்து செயல்படுத்தப்பட்டுள்ளது.ஹேக்கர்களால் பரிமாற்றம் செய்யப்பட்ட சுமார் 3 மில்லியன் டாலர்களும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த Ankr மற்றும் Hay போன்ற டெக்னாலஜிகளின்  துணையுடன் பினான்ஸ் போன்ற பிரபல கிரிப்டோ செயலிகள் இயங்குகிறது.இதனை தாக்கிய ஹேக்கர்கள் அங்கு பணிபுரியும் டெவெலப்பர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள Ankr டெக்னாலஜி கிரிப்டோ பரிமாற்றங்களை தற்காலிகமாக நிறுத்துமாறு கிரிப்டோகரன்சிகளின் பரிவர்த்தனை நடக்கும் சந்தையான DEXes-யிடம்  அறிவுறுத்தியுள்ளதாகவும் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment