மத்திய பிரதேச கோவிலில் கூட்ட நெரிசல்; பலர் காயம் – வீடியோ உள்ளே..!

மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் பகுதியிலுள்ள மகாகாலேஸ்வரர் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி போலீசார், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலில் நேற்று சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டமாக சென்றுள்ளனர். இந்த கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் அனைவருமே சமூக விலகலை கடைபிடிக்காமல் கூடியிருந்துள்ளனர். அப்பொழுதும் அந்த கோவிலுக்குள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வர் உமா பாரதி ஆகியோர் வந்துள்ளனர். இதனால் ஏற்கனவே சுவாமி தரிசனத்திற்க்காக கூடியிருந்த மக்கள், விஐபி- க்களை பார்ப்பதற்காக கோவிலுக்குள் முண்டியடித்து சென்றுள்ளனர்.

இதனால் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வளையமும் உடைந்துள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திகைத்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் காயமடைந்துள்ளனர். மேலும், பக்தர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் பலரும் காயமடைந்துள்ளனர். கொரோனா காலத்தில் சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் கூட்ட நெரிசலில் முண்டியடித்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal