உணவு டெலிவரி ட்ரோனுடன் சண்டையிட்ட காகம்…! வீடியோ உள்ளே…!

ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் உணவுப் பொருட்களை டெலிவரி செய்த ட்ரோனை தாக்கிய காகம். 

இன்று அனைத்து நாடுகளிலும் இணையத்தில் ஆர்டர் செய்யும் உணவுகள் பொருட்கள் வீடுதேடி வருகிறது. அந்த வகையில், மனிதர்கள் உணவுகளை வீடு தேடி வந்து தருவது போல, ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் ட்ரோன் மூலம் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் உணவை டெலிவரி செய்வதற்காக  பறந்த டெலிவரி  ட்ரோன்களுடன் காகங்கள் சண்டையிட்டு உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்ரோன்கள் வானில் பறக்கும் போது, பறவைகள் எதற்காக தாக்குகின்றன? உணவை வேட்டையாடவா? அல்லது ட்ரோன் மூலம் வரும் சத்தத்தால் எரிச்சலுற்று அவ்வாறு தாக்குகின்றனவா? என பல கேள்விகள் எழுந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.