பயிர் காப்பீடு: பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்!

பயிர்காப்பீடு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு கட்டணத்தில் முன்பியிருந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் பங்களிப்பினை குறைக்கும் வகையில் உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்பியிருந்தபடி மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில், வேளாண்துறையில் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என ஏற்கனவே தமிழக அரசு பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் மேற்கோள்கட்டியுள்ளார்.

தமிழகத்தில் சாகுபடி பரப்பளவினை அதிகரித்தல், ஒருமுறைக்கு மேல் சாகுபடி செய்யும் பரப்பினை இரட்டிப்பு செய்யுதல், உணவு தானியங்களின் உற்பத்தி திறன் அதிகரித்தல் ஆகியவை மூன்று தொலைநோக்கு பார்வையுடன் வேளாண்மைக்கு என தனி வரவு செலவு திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல் தாக்கல் செய்ய உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் முக்கிய திட்டங்களின் ஒன்றான பிரதம மந்திரின் பயிர்காப்பீடு திட்டத்தினை தமிழக அரசு தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது. பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ள பரப்பளவும், பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காப்பீடு கட்டணம் மானியத்தில் மத்திய அரசின் பங்கினை 49% லிருந்து பாசன பகுதிகளுக்கு 25% ஆகவும், மானாவரி பகுதிகளுக்கு 30% ஆகவும் குறைத்து நிர்ணயித்தியிருப்பதால், கடந்த 2016-17ல் ரூ.566 கோடி இருந்த மாநில அரசு பங்கானது, 2020-21ல் ரூ.1918 கோடியாக அதாவது (239%) அதிகரித்துள்ளது எனவும் கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.

எனவே, இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது தமிழக அரசுக்கு பெரும் சவாலாகவும், கடினமாகவும் உள்ளதால், பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு கட்டணத்தில் மத்திய அரசின் பங்களிப்பினை முன்பியிருந்தபடியே மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்