நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் சிறிய லென்ஸ் பெட்டியில் (lens case) இருந்து போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக என்சிபி தெரிவித்துள்ளது. மும்பையில் இருந்து கோவா சென்ற கார்டெலியா குருஸஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி நேற்று முன்தினம் இரவு பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தடை செய்யப்பட்ட போதைப்பொருள்: இதன்காரணமாக,அந்த சொகுசு கப்பலில் பயணிகள் போன்று போதைப் பொருள் […]
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கே.கே. நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்,ஆன்லைன் வகுப்புகளின்போது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது, முறையற்ற செய்திகளை அனுப்புதல்,அரை நிர்வாணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு வருதல் மற்றும் மாணவர்களிடம் அநாகரீகமான கருத்துகளை தெரிவித்தல் போன்ற புகார்களின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,அவர் மீது குண்டர் […]
சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி நேற்று இரவு பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்காரணமாக, நேற்று இரவு கார்டெலியா குருஸஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் பயணிகள் போன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் […]
சொகுசு கப்பலில் போதைப்பொருள் பிடிப்பட்டது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட எட்டு பேரிடம் போதைப்பொருள் தடுப்பு போலீசார் தீவிர விசாரணை. மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி நேற்று இரவு பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்காரணமாக, நேற்று இரவு கார்டெலியா குருஸஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் பயணிகள் […]
தமிழகம் முழுவதும் ஆயுத தயாரிப்பை கண்காணிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றதில் இருந்து சைலேந்திரபாபு அவர்கள்,பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில்,தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை சம்வங்கள் தொடந்து அதிகரித்து வருவதை தடுக்க கடந்த சில நாட்களாக இரவோடு இரவாக தமிழ்நாடு போலீசார் முக்கியமான ஆபரேஷனை செய்துள்ளனர். அதாவது,டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ரவுடிகளின் அராஜகத்தை ஒலிக்க கடந்த […]
தமிழகத்தில் உள்ள கிளப்களில் பதிவுத்துறை சோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,இந்த சோதனையின்போது கிரிமினல் வழக்குகள் இருந்தால் கிளப்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளப்களில் காவல்துறையினர் சோதனை நடத்த தடை விதிக்க கோரிய கிளப் உரிமையாளரின் கோரிக்கையை நிராகித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அவர்கள்,கிளப்கள் மற்றும் சொசைட்டிகளில் ஆய்வு செய்வது காவல்துறையின் […]
சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் வட்டிக்கு பணம் கொடுத்து நிலங்களை அபகரித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வேப்பேரி,எழும்பூர் மற்றும் என்.எஸ்.சி போஸ் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்,சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்த நிலையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வீடுகள்,அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் […]
ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் வழக்கை தெலுங்கானாவுக்கு மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. முருகன் தனது பதவியில் இருந்தபோது,தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.இதனையடுத்து,இந்தப் புகார் குறித்து விசாரிக்கக் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து தமிழக காவல்துறை உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக விசாரித்த விசாகா குழு, இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்குப் […]
சென்னையை சேர்ந்த இரு நிறுவனங்கள் ரூ.300 கோடியை மறைத்தது அம்பலமாகியுள்ளது. சென்னையை சேர்ந்த இரண்டு நிதி நிறுவன குழுமங்கள் ரூ.300 கோடிக்கு மேலான வருவாயை மறைத்தது வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,இந்த இரண்டு நிறுவனங்களும் தொழிலதிபர்கள்,பெரு நிறுவனங்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்தது அம்பலமாகியுள்ளது. மேலும்,சென்னையில் கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.9 கோடியை பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வங்கி லாக்கர்களை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திட்டமிட்டுள்ளனர். 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வரும் வெங்கடாசலம் அவர்களின், இல்லம் மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கடாசலம் அவர்கள் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி,அவரது வீட்டில் இருந்து 13.5 லட்சம் பணம்,எட்டு […]
கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விருதாச்சலத்தில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த கண்ணகி – முருகேசன் ஆகிய இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில்,கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டனர்.மூக்கு,காது வழியாக விஷத்தை ஊற்றி இரண்டு பேரையும் உயிருடன் எரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து,இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.அதன்படி,இந்த வழக்கை சிபிஐ […]
அசாம் மாநிலத்தில் போலீசார் சுட்டதில் கீழே விழுந்த நபர் மீது புகைப்படக் கலைஞர் ஒருவர் கொடூரமாக ஏறி மிதிக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு,அம்மாநிலத்தில் உள்ள தர்ரங் மாவட்டத்தின் சிபஜார் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வேளாண் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி,கடந்த திங்கட்கிழமையன்று ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடங்கிய நிலையில்,800 குடும்பங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த […]
தமிழகம் முழுவதும் போலீசார் பல ரவுடிகளை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக பல பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தினர்.மேலும்,நள்ளிரவில் ரவுடிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின் பேரில் ரவுடிகளின் அராஜகத்தை ஒடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி,சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ரவுடிகளின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.துணை ஆணையர் ராஜேஸ் கண்ணா தலைமையில் நடந்த இந்த சோதனையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பல […]
ஆபாச வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக மும்பை குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகளில் வெளியிட்டதாக ஜூலை 19 அன்று பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.அதன்பின்னர்,அவர் இரண்டு மாதங்கள் நீதிமன்றக் காவலில் இருந்தார். இதனையடுத்து, கடந்த 15 ஆம் தேதி ராஜ் குந்த்ரா உட்பட 4 பேர் […]
பாலியல் நோக்கம் இல்லாமல் பெண் குழந்தையின் கன்னங்களைத் தொடுவது பாலியல் வன்கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை,தானே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் முகமது அகமது உல்லா(வயது 46) என்பவர்,கடந்த ஆண்டு எட்டுவயது சிறுமியை தனது இறைச்சி கடைக்குள் அழைத்து சென்றுள்ளார்.அவர் சிறுமியை தனது கடைக்கு அழைத்துச் செல்வதைப் பார்த்த ஒரு பெண், சந்தேகம் அடைந்து, பின்னர் அந்த இடத்திற்குச் சென்றதாகவும்,அப்போது,அங்கு முகமது உல்லா,சிறுமியின் கன்னத்தைத் தொட்டு, தகாத முறையில் நடந்து […]
சென்னையில் காவல்நிலையத்தின் அருகிலேயே திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சம்பத்குமார்,நேற்று இரவு அண்ணாநகர் காவல்நிலையம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது,எதிரே ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல்,காவல்நிலையம் அருகே சம்பத்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதனால்,சம்பத் குமார், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த போலீசார் சம்பத்குமாரின் உடலை மீட்டு பிரேத […]
தன்மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று தமிழக சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து, விசாரித்திருந்தனர்.இதனையடுத்து,சிறப்பு டி.ஜி.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து,இந்த வழக்கில் புகார் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. மீது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை […]
குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள பப்ஜி மதனை தற்போது அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்து வந்துள்ளனர். யூ -டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு,அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். […]
ஈமு கோழி முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தமிழக முதலீட்டார்கள் பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு யுவராஜ்,தமிழ்நேசன்,வாசு ஆகியோர் ஈரோட்டில் ஈமு கோழிவளர்ப்பு முதலீட்டு திட்டம் தொடங்கி,ரூ.2.7 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதனையடுத்து,121 முதலீட்டார்களிடம் தலா ரூ.1.5 லட்சம் முதலீடு பெற்று,ஈமு கோழி திட்டத்தில் மோசடி நடந்ததாக 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்,தற்போது விசாரணைக்கு வந்த வழக்கில்,ஈமு கோழி மோசடியில் […]
வெளிநாட்டு ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் முக்கியமான உள்கட்டமைப்புக்கு எதிரான தீங்கிழைக்கும் இணைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க கணினி மோசடி மற்றும் சட்டத்தை மீறும் ஹேக்கர்கள் பற்றிய தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் வழங்குவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.ஏனெனில்,அரசாங்கத்தின் முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து ரான்சொம்வேர் (ransomware) தாக்குதல்களில் ஹேக்கர்கள் ஈடுபடுகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெகுமதி சலுகையைப் பற்றிய கூடுதல் தகவல்களை https://rewardsforjustice.net/english/ என்ற இணையதளத்தில் […]