திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.க்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து.!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான விஜயகுமாருக்கு இந்திய கிரிக்கெட்

By surya | Published: Jun 01, 2020 08:39 PM

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான விஜயகுமாருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர், சுரேஷ் ரெய்னா. இவர் இந்திய அணி சார்பில் பல போட்டிகளில் விளையாடினார். மேலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டதில் காவல் கண்காணிப்பாளரான பணிபுரிந்து வருபவர், விஜயகுமார். இவர் இன்று பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து புகார்தாளர்களிடம் கருத்துக்களை கேட்கும் விதமாக, "பீட்பேக் கால்" (FEEDBACK CALL) எனும் சேவையை தொடங்கினார்.

இதற்க்கு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Step2: Place in ads Display sections

unicc