வங்கதேசத்தில் மட்டுமே இந்திய அணிக்கு ரசிகர்களின் ஆதரவு இல்லை என ரோடித் சர்மா கருத்து...

வங்கதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை

By kaliraj | Published: May 17, 2020 07:43 PM

வங்கதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை என இந்திய கிரிகெட் நட்சத்திரம் ரோகித் சர்மா கருத்து.
இந்திய கிரிக்கெட்அணி வீரர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம்  உள்ளது. உலகளவில் இந்திய கிரிக்கெட் அணிக்கு  ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இது, வேறு எந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கும் கிடைக்காத பெருமையாகும்.
 
இந்நிலையில், வங்கதேச வீரர் தமிம் இக்பாலுடன் இன்ஸ்டாகிராமில் ரோகித் சர்மா உரையாடினார். அப்போது அவர், இந்தியாவிலும் வங்கதேசத்திலும் உணர்ச்சிமிக்க கிரிக்கெட்  ரசிகர்கள் இருக்கிறார்கள். நாம் தவறு செய்யும்போது அவர்கள் எல்லா முனைகளிலிருந்தும் கண்டிப்பார்கள். வங்கதேசத்தில் விளையாடச் செல்லும்போது நம்பமுடியாத காட்சியாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவின்றி இந்திய அணி எங்கும் விளையாடியதில்லை. ஆனால் வங்கதேசத்தில் மட்டும்தான் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைப்பதில்லை. இப்போதுள்ள வங்கதேச அணி வீரர்களான நீங்கள் அனைவரும் மிகவும் தீவிரமாக விளையாடுகிறீர்கள். 2019 உலகக் கோப்பையில் அனைவரும் அதைப் பார்த்தார்கள் என தனது அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc