ஆஸ்திரேலியா அணிக்கு சாவு மணி அடித்த கோலி படைகள்..! 71 வருட கனவை நினைவாக்கியதற்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு.!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளது.

மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.இந்த வெற்றியை விராட் கோலி தலைமையிலான இந்திய படைகள் பிசிசிஐயின் 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்ததுள்ளது.மேலும் உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டது.இதன் காரணாமாக தான் ஆஸ்திரேலியா அணிக்கு சாவு மணி அடித்து சாதித்த இந்திய அணிக்கு பல லட்சங்களில் பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான- பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன் படி போட்டி ஒன்றிற்கு, ஆடும் லெவனில் இருந்த வீரர்களுக்கு குறிப்பிட்டு சொன்னால் மைதானத்தில் விளையாடிய வீரர்களுக்கு ரூ.15 லட்சமும் மற்றும் மாற்று வீரர்களுக்கு ரூ.7.5லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் இந்திய அணீயின் பயிற்சியாளர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பயிற்சியாளர் அல்லாத மற்ற பணியாளர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் விதிகளின்படி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ சந்தோஷ மகிச்சியோடு கூறி உள்ளது.

author avatar
kavitha

Leave a Comment