அதிர்ச்சி செய்தி: நட்சத்திர வீரர் அணியில் இருந்து ஒரு வருடத்திற்கு நீக்கம்! ரசிகர்கள் கவலை!

337

2019 உலகக் கோப்பை தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடும் தற்போது அறிவித்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி நேற்று அந்த தொடருக்கான அணியில் அறிவித்தது இந்த அணியில் இருந்து மிட்செல் மார்ஷ் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறுவதற்கான ஒப்பந்தப் பட்டியலி இருந்தும் ஒரு வருடத்திற்கு அவர்கள் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக நடைபெற்ற தொடரில் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இருவரும் சரியாக செயல்படாததால் இருவருக்கான ஒப்பந்தத்தையும் நீக்கி உள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த ஒப்பந்த நீக்கம் ஒரு வருடத்திற்கு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.