பட்டாசு ஆலை விபத்து…பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்..நிவாரணம் அறிவித்த முதல்வர்.!!

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு தலா 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர்.

சிவகாசி ஆனையூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் குமரேசன்(35), சுந்தர்ராஜ்(27)அய்யம்மாள் (70) ஆகிய 3 பெரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த இருளாயி என்பவருக்கு சிவகாசி அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரணத்தை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ” பட்டாசு அலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த உயிரிழந்தவர்களின் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் இருளாயி அவர்களுக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”: என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.