#BREAKING: இந்தியாவில் கோவிஷீல்ட் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தம்..!

பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்காலிகமாக கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளில் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு  அவை பரிசோதனையில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான்  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராசெனேகா இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட்.

இந்த கோவிஷீல்ட் பரிசோதனை பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீரம் நிறுவனம் சார்பில் இந்தியாவில் பல இடங்களில் பரிசோதனை நடைபெற்றது. பல நாடுகளில் பக்க விளைவு காரணமாக பல நாடுகளில் கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மருந்தால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்காலிகமாக கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. இதில், சென்னையில் இரண்டு மருத்துவமனையில் 300 பேருக்கு கோவிஷீல்ட் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan