covid-19 பாதிப்பு உலகளவில் இந்தியா 6 வது இடத்தில் உள்ளது.!

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 6 வது இடத்தில் உள்ளது. இத்தாலியை

By gowtham | Published: Jun 06, 2020 02:52 PM

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 6 வது இடத்தில் உள்ளது. இத்தாலியை பின்னுக்கு தள்ளி இந்தியா 6 வது இடத்தில் இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா தோற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 6 வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதல் இடத்தில உள்ளது . இதுவரை உலகளவில் 6,850,236 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 398,244 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர பாதிக்கப்பட்டவர்களில் 3,351,229 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 130,529 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 4.906 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது 3,109,983 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் 236,184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,649 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 9471 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 286 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் இந்தியாவில் உயிரிழப்பின் அதிகரித்து கொண்டே செல்கிறது

Step2: Place in ads Display sections

unicc