Covid-19 எதிரொலி: தென் கொரியாவில் ஹூண்டாய் கார் நிறுவன தொழிற்சாலை மூடல் ..!

Covid-19 எதிரொலி: தென் கொரியாவில் ஹூண்டாய் கார் நிறுவன தொழிற்சாலை மூடல் ..!

  • covid-19  வைரஸ் தாக்குதலால் தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவன தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
  • மொத்தமாக தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,022 ஆக உள்ளது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உள்ள உகானில் கொவிட் 19 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உகானில் நகரில் இருந்து சீனாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தினமும் இந்த வைரசால் சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி தென்கொரியா , ஜப்பான் , இந்தியா , அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.

இந்நிலையில் covid-19  வைரஸ் தாக்குதலால் தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவன தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.இந்த தொழிற்சாலையில் இருந்து ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சீனாவிற்கு அடுத்த படியாக தென்கொரியாவில்  தான் covid-19  வைரஸ்  பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது.அதனால் தான்  ஹூண்டாய் கார் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தென் கொரியாவில் நேற்று மட்டும்  256 பேருக்கு covid-19  வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,022 ஆக உள்ளது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube