கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் இரத்த பிளாஸ்மா பயன்படுத்த பாதுகாப்பானது!

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் இரத்த பிளாஸ்மா பயன்படுத்த பாதுகாப்பானது!

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் இரத்த பிளாஸ்மா பயன்படுத்த பாதுகாப்பானது.

உலகம் முழுவதும் கொரோனா என்கின்ற கொடிய வைரஸ் நோயானது, அனைவரையும் அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸால்  இதுவரை, 8,776,448 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 462,905 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆய்வு ஒன்றில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்கனவே நோயிலிருந்து மீண்டவர்களிடமிருந்து இரத்த பிளாஸ்மாவை மாற்றுவதன் மூலம் சிகிச்சையளிப்பது பாதுகாப்பானது என்றும், இந்த முறை பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களில் இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட, ஆன்டிபாடிகள, இந்த வைரஸை எதிர்த்து போராடக் கூடிய தனமாய் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

மாயோ கிளினிக் புரோசிடிங்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில்,  இந்த முறை பாதுகாப்பானது, மலிவானது, மற்றும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் என்றும் மாயோ கிளினிக்கின் மயக்க மருந்து நிபுணர் மைக்கேல் ஜாய்னர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube