காங்கிரஸ் டிவிட்டர் பக்கம் முடக்கம்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களை தற்காலிகமாக முடக்க பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ” இந்தியா ஒற்றுமை பயணம்” என்ற பெயரில் இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் கடந்து நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அந்த நடை பயணத்தை குறிப்பிடும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோவில் கேஜிஎப் 2 படத்தின் பாடல்கள் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்டதாக MRT இசை நிறுவனம் காப்புரிமை கோரி பெங்களூரு நீஎதிமன்றத்தில் வழக்கு தொடர்தது.

இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மற்றும் இந்திய ஒற்றுமை பயணம் குறித்த பார்த்த ஜோடோ டிவிட்டர் பக்கம் ஆகிய இரண்டு கணக்குகளையும்‌ தற்காலிகமாக முடக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment