பிரியங்கா காந்தியை அரசு பங்களாவில் இருந்து காலி செய்ய உத்தரவு.! லக்னோவில் குடியேற்றம்.! 

பிரியங்கா காந்தியை அரசு பங்களாவில் இருந்து காலி செய்ய உத்தரவு.! லக்னோவில் குடியேற்றம்.! 

டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் இருந்து பிரியங்கா காந்தியை காலி செய்ய கோரி உத்தரவிட்டதை அடுத்து உ. பி-யின் லக்னோவில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி தங்கி வந்த அரசு பங்களாவை காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்றும், ரூ. 3.46 லட்சம் வீட்டு பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்காக செலுத்த வேண்டும் என்று மத்திய நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது டெல்லியில் பிரியங்கா காந்தி வசித்து வரும் லோதி பங்களாவை காலி செய்ய முடிவு செய்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவிற்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. கோகலே மார்க்கில் உள்ள ஷீலா கவுலுக்கு சொந்தமான வீட்டில் தங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 2015-ல் காலமான கவுல் இந்தியாவின் முதல் பிரதமரும், பிரியங்காவின் பெரிய தாத்தாவுமான ஜவஹர்லால் நேருவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. கவுல் ஒரு காலத்தில் மத்திய அமைச்சராகவும், ஆளுநராகவும் இருந்துள்ளார்.

மேலும் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் போது செயலாளராக இருப்பதால் லக்னோவில் குடியேறுவதன் மூலம் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியும் என்று கணித்து முடிவு செய்துள்ளார். தற்போது பிரியங்கா தனது லோதி பங்களாவில் உடமைகளை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்ததும் லக்னோவிற்கு குடியேறுவார் என்று கூறப்படுகிறது.

Join our channel google news Youtube