மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு..!

மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு..!

ManishSisodia

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஜூன் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபானக்கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மீ கட்சித்தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த மார்ச் 9ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று வரை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாலும், அவரது நீதிமன்ற காவல் மட்டுமே நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்பொழுது மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 1 வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டதோடு, படிக்கும் நோக்கத்திற்காக அவருக்கு நாற்காலி மற்றும் மேஜை வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube