திருமண நாளன்று மணமகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதுகாப்புடன் கரம்பிடித்த ஜோடிகள்!

ராஜஸ்தானில், திருமணம் நடைபெறும் நாள் அன்று மணமகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு உடை அணிந்து மணமக்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் ஷாபாத் நகரின் பரா பகுதியில் வசித்து வரக்கூடிய இருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருமணத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான சோதனைகளை முடித்துள்ளனர். இந்நிலையில் திருமணம் நடைபெறக்கூடிய நாளில் வெளியாகிய கொரோனா பரிசோதனையின் முடிவில் மணமகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் ஜோடிகள் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததையடுத்து மணமக்கள் இருவருக்கும் கொரோனா தடுப்பு தனிநபர் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் முறையாக திருமணத்திற்கான சடங்குகளை முடித்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த முக்கியஸ்தரும் தனிநபர் தடுப்பு பாதுகாப்பு உடைகளை அணிந்தே திருமணம் நடத்தி வைத்துள்ளார். மக்கள் கூடுகை தவிர்க்கப்பட்டு இருந்தாலும் இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கொரோனாவுக்கு மத்தியிலும் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

author avatar
Rebekal