2 வயது மகனை ரூ.18 லட்சத்திற்கு விற்று சுற்றுலா சென்ற தம்பதியினர்…!

சீனாவில் 2 வயது மகனை ரூ.18 லட்சத்திற்கு விற்று சுற்றுலா சென்ற தம்பதியினர். 

சீனாவில் பெய்ஜிங்கில் ஜி என்ற குடும்ப பெயர் கொண்டவர் தனது இரண்டாவது மனைவியின், குழந்தை பராமரிப்பு சுமையை போக்குவதற்காக ஜியாஜியா என்ற பெயர் கொண்ட சிறுவனை விற்றுள்ளார். அவர் வேறு ஊருக்கு வேலையின் காரணமாக சென்றதால் சிறுவனை, தனது சகோதரன் லின் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில்பிற குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பில் ஹுஷோ நகரில் விட்டுவிட்டார்.

இந்நிலையில், கடந்த மாதம் ஷி தனது மகனை, அவரது தாயார் அவரைப் பார்க்க விரும்புகிறார் என்று கூறி, தனது சகோதரனிடமிருந்து அழைத்துச் சென்றார். சில நாட்களுக்கு பின் சிறுவன் தன்னிடம் வரதததால், லின் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர், ஷீ-யிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள சாங்ஷு என்ற நகரத்தில் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு ஷீ 158,000 யுவான் (ரூ .18 லட்சம்) க்கு விற்றிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். மேலும், அந்த பணத்தை பயன்படுத்தி, அவர் தனது 2-வது மனைவியை சுற்றுலா கூட்டி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த தம்பதியினர் மீது, குற்றவியல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சமீப ஆண்டுகளாக இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.