தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம்; மகிழ்ச்சி; பிரதமர் மோடி ட்வீட்.!

By

PMModiNDA MeetDelhi

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக்கூட்டத்தில் கட்சிகள் பங்கேற்பது மகிழ்ச்சி என பிரதமர் மோடி ட்வீட்.

டெல்லியில் இன்று பாஜக தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 2024இல் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதை அடுத்து, தேர்தல் வேலையில் பிரதான கட்சிகள், மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக தலைமையில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில், கலந்து கொள்ள கூட்டணி கட்சியின் தலைவர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி என ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவீட்டில், இன்று நடைபெறும் நமது தேசிய ஜனநாயக கூட்டணி(NDA)யின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியா முழுவதிலும் இருந்து கூட்டணி கட்சிகள் வந்திருப்பது மகிழ்ச்சி எனவும், தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும், கொள்கைகளின் நிறைவேற்றம் ஆகியவற்றிற்காகவும் நமது கூட்டணியில் ஆலோசிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி டிவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே எதிர்க்கட்சிகள் தரப்பில் கூட்டணி குறித்து முடிவு செய்ய ஆலோசனைக்கூட்டம் இன்று பெங்களுருவில் நடைபெற்று முடிந்த நிலையில், டெல்லியில் ஆளும் பாஜக தலைமையில் கூட்டம் நடப்பது கவனிக்கத்தக்கது.