ஒரு கோடி பேரை தொடப்போகும் கொரோனா பரிசோதனை… அமெரிக்க அதிபர் தகவல்….

சீனாவின் வூகாண் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று  உலக அளவில்  அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்புகளை அதிகம் சந்தித்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது.  அந்நாட்டில் மட்டும் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றின் கரணமாக  பலியாகி உள்ளனர். மேலும், 13.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தவைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டு திரும்பி சென்றுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து  அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில்  கூறும்பொழுது, அமெரிக்காவில் இந்த வாரத்திற்குள் கொரோனா வைரஸ் பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை எட்டும் என தெரிவித்து உள்ளார்.  நேற்று காலை வரை சுமார் 90 லட்சம் அளவுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன என்றும்,   நாளொன்றுக்கு 3 லட்சம் பரிசோதனைகள் நடந்து வருகின்றன என்றும் தெரிவித்தார். மேலும் அவர், இந்த பாரிசோதனைகள் இன்னும் பெரிய அளவில் எண்ணிக்கை உயரும் என அவர் தெரிவித்து உள்ளார்.
author avatar
Kaliraj