மகாராஷ்ராவில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட மத்திய ஆயுத காவல் படையை அனுப்பி வைக்க கோரிக்கை….

மகாராஷ்ராவில் கடந்த மார்ச்  25 முதல் காவல்துறையினர் அயராது பொது ஊரடங்கை நிலைநாட்ட அதிக வேலை செய்து வரும் நிலையில்  அவர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டியுள்ளதால் மத்திய ஆயுதப்படை காவலர்களை அனுப்பி வைக்கமாறு மத்திய அரசிடம் மகாராஷ்டிரா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கொடிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது மஹாராஷ்டிரா. இங்கு 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே  ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் அம்மாநில காவல்துறையினர்  கடுமையாக பணியாற்றி வருகின்றனர். பணியில் இருந்த பல காவலர்களுக்கு  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் சிலர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதனால் 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் பணிக்கு வரவேண்டாம் என அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே ஏற்கனவே மாநில காவல்துறையினருடன் 32 கம்பெனி  மத்திய ரிசர்வ் காவல் படையினர் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈத் பண்டிகை நெருங்குவதால் சட்டம் ஒழுங்கை காக்க கூடுதலாக 20 கம்பெனி மத்திய ஆயுத காவல் படையை (சி.ஏ.பி.எப்) அனுப்பி வைக்குமாறு மத்திய அரசிடம், மகாராஷ்ட்ர அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

author avatar
Kaliraj