அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விபரம்!

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் விபரம். 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்நிலையில், இந்த கொரோனா வைரசால் இதுவரை உலக அளவில்,  6,562,695 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 386,788 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இதுவரை, 1,901,783 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 109,142 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால் நேற்று மட்டும் அமெரிக்காவில், 1,083 பேர் உயிரிழந்துள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.