நாம் பேசுவதாலும், வணக்கம் சொல்வதாலும் கொரோனா பரவாது.! மாவட்ட ஆட்சியர் கருத்து.!

  • அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆரோக்கிய மையம், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (விளைக்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆரோக்கிய மையம், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (விளைக்கிழமை) நடைபெற்றது. இந்த நீள்கழச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக நிறுவுனர், ஆசிரியர், மாணவர்கள் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன், சீனாவில் இருந்து 92 பேர் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் என கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், சுகாதாரத்தைப் ஒழுங்காக பார்த்தால் தான் நோயில் இருந்து தப்பிக்க முடியும். நாம் ஒருவருக்கொருவர் பேசுவதாலும், வணக்கம் சொல்வதால் கொரோனா வைரஸ் பரவாது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட இணைய வழி வேலைவாய்ப்பு தளம் மற்றும் பயோ-மெட்ரிக் வருகை பதிவையும் ஆட்சியர் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்