வாய்ப்பில்லை ராஜா..ஐபிஎல் நடக்க வாய்ப்பில்லையாம்-கசிந்தது கங்குலி வட்டார தகவல்

வாய்ப்பில்லை ராஜா..ஐபிஎல் நடக்க வாய்ப்பில்லையாம்-கசிந்தது கங்குலி வட்டார தகவல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்.,15 ந்தேதியும் ஐபில்எல் தொடங்க வாய்ப்புகள் குறைந்த அளவே காணப்படுவதாக கிரிக்கெட் வட்டாரத்தகவல் வெளியாகியுள்ளன.

உலகம் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும்  பரவலை தடுக்ககடுமையான  நடவடிக்கைகளை அரசு கையில் எடுத்து வருகின்றது.இந்நிலையில் 2020 நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டியானது மார்ச் 29 ந்தேதி நியப்படி தொடர்ந்து இருக்க வேண்டும் ஆனால் எங்க வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய காலக்கட்டம் இதனால் ஜபிஎல் தொடர் ஏப்.,15 ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது.இந்நிலையில் இவ்வைரஸின் பாதிப்பு ஆனது எதிர்பார்ப்பைத் தாண்டி மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.இதன் காரணமாக ஏப்.,14 ந்தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் ஆகையால் ஐசிசியின் அறிவிப்பு படி பார்த்தல்  அடுத்தநாள் ஏப்.,15  ஐபிஎல் போட்டி துவங்குமா? என்றால் கேள்வி குறிதான் காரணம் இந்தியாவில் தொற்று அதிகரிக்க தொடங்கி விட்டது இதன் காரணமாக மக்களை தனிமைப்படுத்த அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது.எனவே நடப்பாண்டிற்கான ஐபிஎல் ஏப்,.15ல் தொடங்க வாய்ப்புகள் மிக குறைவு என்றே கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் இது குறித்து கங்குலி தெரிவிக்கையில் இப்போதைக்கு போட்டியை தள்ளி வைக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை,மேலும் போட்டிகளை எப்போது நடத்துவது என்பது குறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை,கடந்த மார்ச் 14., ந்தேதியே கடைசியாக நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் போட்டிகளை ஏப்.,15க்கு ஒத்திவைக்கலாம் என்று முடிவு எடுத்தோம் அதில் உறுதியாக உள்ளோம்.மேலும் நாட்டின் நிலைமையை எல்லாம் உற்று நோக்கி கவனித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.  

author avatar
kavitha
Join our channel google news Youtube