தமிழகஅரசு மேல் கடும் கோபத்தில் மத்திய அரசு..

தமிழகஅரசு மேல் கடும் கோபத்தில் மத்திய அரசு..

கொரோனா வைரஸை தடுக்க தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு.இந்நிலையில் முதல்வர் பிறப்பித்த 144 தடை உத்தரவால் ஏற்படுகின்ற பிரச்னைகளை சமாளிக்க பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி விட்டது. இது பெரியளவில் பாராட்டைடப்பெற்றாலும்,இதை தவறாக பயன்படுத்தி சிலர் சாலைகளில் சுற்றித் திரிவதை  அரசு தடுக்க தவறிவிட்டது என்று தமிழக அரசு மீது குற்றம் சாட்டப்படுகிறது.இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசியுள்ளார்.அதில் மாநில அரசுகள் எடுத்து வருகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நாள்தோறும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். மக்கள் பாதுகாப்பான துாரத்தில், வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று மத்திய அரசும், மருத்துவர் பெருமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.ஆனால் ‘தமிழகத்தில் இதை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று ஹர்ஷ் வர்தன் கேள்வி எழுப்பியு உள்ளார்.குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில் அலை மோதிய கூட்டம் குறித்தும் கோபமாக கேட்டுள்ளார். அகில இந்திய மருத்துவ கவுன்சில் தினந்தோறும் அளித்து வருகின்ற ஆலோசனைகளை அமல் படுத்துவதிலும் தமிழக அரசு சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசி வழிபாக தொடர்பு கொண்டு இது குறித்து  பேசியுள்ளார்.அதில்  தமிழகத்தில் தேவைப்படுவோரை தவிர மக்கள் சர்வ சாதாரணமாக தெருவில் நடமாடுவதை சுட்டிக் காட்டி கோபப்பட்டதாகவும். இந்த விஷயத்தில், தமிழகம் உட்பட சில மாநில அரசுகள், கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று மோடி கூறியதாக அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

author avatar
kavitha
Join our channel google news Youtube