உடல்கள் வீதிகளில் கைவிடப்படும் அவலம்..நெஞ்சை பிளக்கும் ஈகுவாடர் கொடுமை

உடல்கள் வீதிகளில் கைவிடப்படும் அவலம்..நெஞ்சை பிளக்கும் ஈகுவாடர் கொடுமை

ஈகுவாடரில் அடக்கம் செய்யப்படாமல் உடல்கள் வீதிகளியே கைவிப்படும் சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் ஈகுவாடாரிலும் பரவி மக்களை பாடாய் படுத்தி வருகிறது.இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடலை அடக்கம் செய்ய அங்கு யாரும் முன் வராததால் உடல்களை வீதியிலேயே உறவினர்கள் விட்டு செல்கின்றனர்.

அந்நாட்டில் மிக பிரபலமான நகரமாக கருதப்படும் குவாயாகுயில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.இதன் காரணமாக போதிய படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வருகின்றனர்.இதில் சிலரது சடலங்கள் நெகிழி பைகளாக சுற்றப்பட்ட நிலையில் வீதிகளில் விட்டுச் செல்கின்றனர்.மேலும் வீடு மற்றும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தபட்டவர்களில் சிலர் சிகிச்சைக்கு காத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
kavitha
Join our channel google news Youtube