ரூ.15 லட்சம்..காவல்துறை+தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கி-கருணாஸ் அறிவிப்பு

ரூ.15 லட்சம்..காவல்துறை+தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கி-கருணாஸ் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினருக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 15 லட்சத் தொகையை கருணாஸ் வழங்கி உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் உலகெங்கும் அதிதீவிரமடைந்து வருகிறது.இந்நிலையில் மின்னல் வேகமாக பரவி வரும் தொற்றை தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், சமூக இடைவெளியை உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டு தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இருந்த போதும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.124 பேர் தமிழகத்தில் வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பாதிப்பு அதிகமாவுள்ள  அந்தந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விழிப்புணர்வையும், மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இரவு பகல் பாராது காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களை பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை செலுத்துகிறார்கள் என கவனம் பெற்ற நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கொரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சமும், அதேபோல் இராமநாதபுரம் மாவட்டம் முழுதும் கொரோனா தொற்றிலிருந்து அன்றாடம் காக்க இரவு பகல் பாராமல் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு  ரூ. 5 லட்சமும் தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். கருணாஸ் அறிவித்துள்ளார்.இந்நிலையில் 
ஏற்கெனவே பொதுமக்கள் நிவாரண நிதிக்காக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  வீரராகவராவ்-வின் கோரிக்கையை ஏற்று ரூ. 10 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha
Join our channel google news Youtube