கொரோனா தடுப்பு நடவடிக்கை: தலைமைச் செயலகம் இரண்டு நாட்களுக்கு மூடல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தலைமைச் செயலகத்தில் கிருமி நாசினி

By surya | Published: Jul 10, 2020 12:52 PM

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தலைமைச் செயலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளதால் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் குறிப்பாக, சென்னையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையான கிருமி நாசினி தெளித்தல், உள்ளிட்ட பணிகளுக்காக நாளை மற்றும் நாளை மறுநாள் தலைமைச் செயலகம் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

Step2: Place in ads Display sections

unicc