#Breaking: தமிழகத்தில் 1,372 பேருக்கு கொரோனா – அமைச்சர் விஜயபாஸ்கர்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,323 லிருந்து 1,372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 1,323 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 1,372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 82 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் இதுவரை 365 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதையடுத்து கொரோனா வைரசால் இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 35,036 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் இன்று ஒரு நாள் மட்டும் 5,360 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என கூறினார். பின்னர் 1,007 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 31 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன என்றும் நாட்டிலேயே இங்குதான் அதிக பரிசோதனை மையங்களை இருக்கின்றன என தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.1% என்ற நிலையிலேயே உள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்று மட்டும் திருப்பூரில் 28 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு அங்கு 108 ஆகவும், சென்னையில் 7 பேருக்கு உறுதியான நிலையில், மொத்தம் 235 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கோயம்பத்தூரில் மேலும் ஒருவருக்கு உறுதியான நிலையில், தற்போது 128 ஆக உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்