தமிழகத்தில் கொரோனாவால் இன்று அதிகபட்சமாக 13 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனவால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளதால்,

By surya | Published: May 31, 2020 06:58 PM

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனவால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் இன்று புதிதாய் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்து.

மேலும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்தது. இது, மக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Step2: Place in ads Display sections

unicc