ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 8,000 ஐ தாண்டியது.!

ராயபுரத்தில் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,089ஆக உயர்ந்துள்ளது.

By gowtham | Published: Jul 01, 2020 11:16 AM

ராயபுரத்தில் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,089ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்தது மேலும் இதுவரை சென்னையில் 34,828 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 22,610 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், 888 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,089ஆக உயர்ந்துள்ளது. எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை மண்டல வாரியாக வெளியிட்டது மாநகராட்சி. அண்ணாநகரில் இதுவரை 6,355 பேர், மேலும் தண்டையார்பேட்டை -6,637 பேர், தேனாம்பேட்டை- 6,547பேர், கோடம்பாக்கம்- 6,173 பேர், திருவிக நகர்- 4,833பேர், வளசரவாக்கம்- 2,724பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc