#BREAKING: தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்..மொத்த பலி எண்ணிக்கை 900ஐ தாண்டியது.!

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 911  ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை  47,650 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 16 பேரும், அரசு மருத்துவமனையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தவர்களின், கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.