கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் போடப்படும் வரை கொரோனாவுக்கு முடிவு கிடைக்காது – ஜெர்மனி அதிபர்!

கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் போடப்படும் வரை கொரோனாவுக்கு முடிவு கிடைக்காது – ஜெர்மனி அதிபர்!

கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதிலும் உள்ள அனைவருக்கும் செலுத்தப்பட்டு முடிக்கும் வரை கொரோனாவுக்கு முடிவு கிடைக்காது என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள் கூறியுள்ளார்.

ஜீ 7 உறுப்பு நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பில் பேசிய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள், உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொண்டால் மட்டுமே கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும், இல்லையென்றால் கொரோனாவுக்கு முடிவு கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மனி உள்ளிட்ட மற்ற பிற நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்றடைய வேண்டும் எனவும்  ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், சீனாவைத் தொடர்ந்து பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்பொழுது ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருவதால் உலக நாடுகள் கொரோனா மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு சார்பாக சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், மக்கள் அவற்றை கடைபிடியுங்கள் என கூறியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube