கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் திறமையாக எதிர்கொள்வோம் – அமைச்சர் கே.என்.நேரு

கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் திறமையாக எதிர்கொள்வோம் – அமைச்சர் கே.என்.நேரு

  • மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் திறமையாக எதிர்கொள்வோம்.

சென்னை மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு கையேட்டினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வெளியிட்டார். அதற்குப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் தேவையான அளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத பகுதிகளில் தான் கொரோனாவால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். தற்போது மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வெண்டிலெட்டர்களை கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

எனவே மூன்றாவது அலை வந்தாலும் அரசு யாரையும் பாதிக்காத வகையில், அரசு அதை திறமையாக எதிர்கொள்ள தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube