ஏசி மூலம் பரவும் கொரோனா வைரஸ்! சீன ஆய்வில் வெளியான அதிர்ச்சியான தகவல்!

ஏசி மூலம் பரவும் கொரோனா வைரஸ்! சீன ஆய்வில் வெளியான அதிர்ச்சியான தகவல்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வைரஸ் நோயானது தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதற்கான ஆய்வுகளுக்கும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, ஏசி மூலம் கொரோனா தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வந்த 3 வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அங்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவருந்திக் கொண்டிருந்துள்ளார். அவர் தும்மும் போதும், இருமும் போதும் வெளிவந்த நீர்துளிகள் ஏசியில் கலந்து, அங்கிருந்த 10 பேருக்கும் கொரோனா வைரஸ் ஏற்படக் காரணமாகியுள்ளது. இதனை சீன நோய் தடுப்பு ஆய்வகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அந்த உணவகம் சீலிடப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube