மூடப்பட்டது மகேந்திரகிரி இஸ்ரோ ஆராய்ச்சி மையம்..! கட்டுமான பணிகள் நிறுத்தம்!

மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகம் மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸிற்கு உலக நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 10 பேர் இந்த கொலைக்கார வைரஸிற்கு பலியாகிய நிலையில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த வைரஸால் முதல் உயிர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு  ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதே போல் தமிழக முதல்வர் பழனிச்சாமியும் நேற்று மாலை6 முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அறிவித்த நிலையில் அது குறித்த அரசாணையையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மகேந்திரகிரியில் இயங்கி வரும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகமானது மூடப்பட்டு உள்ளது.  மேலும்  இஸ்ரோ மையத்தில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha