கொரோனா தடுப்பூசி ஆய்வு.. அகமதாபாத் வந்தடைந்த பிரதமர் மோடி..!

கொரோனா தடுப்பூசி உற்பத்தி குறித்து அகமதாபாத் சைடஸ் பயோடெக் பார்க் நிறுவனத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று நகரங்களில் உள்ள கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு நேரில் செல்கிறார். இதன் ஒரு பகுதியாக மோடி அகமதாபாத்திற்கு அருகிலுள்ள ஜைடஸ் காடிலாவின் நிறுவன ஆலைக்கு கொரோனா தடுப்பூசி ஆய்வு செய்ய வந்துள்ளார்.

இந்த ஆலை அகமதாபாத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள சங்கோடர் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ளது. மோடி ஒரு மணி நேரம் ஆலையில் இருப்பார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். ஜிடஸ் காடிலா தனது தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளது, மேலும், கடந்த ஆகஸ்ட் முதல் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளது.

அகமதாபாத்தில் இருந்து, மோடி ஹைதராபாத்திற்கு செல்லவுள்ளார். அங்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது. ஹக்கிம்பேட்டை விமானப்படை நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், மதியம் 1.30 மணிக்கு ஜீனோம் பள்ளத்தாக்கிலுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மோடி சென்றடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஹைதராபாத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது.

பாரத் பயோடெக்கின் தடுப்பூசி 3 கட்ட சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து, பிரதமர் புனேவுக்குச் செல்வார், அங்கு அவர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனத்தை மாலை 4.30 மணியளவில் பார்வையிடயுள்ளார். இது உலகளாவிய மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தை ஆய்வு செய்த பிறகு பிரதமர் மாலை மீண்டும் டெல்லிக்கு புறப்படவுள்ளார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan