கொரோனா தடுப்பூசி – ராகுல் காந்தி குற்றசாட்டு

கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றசாட்டு.

கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கிய கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதனிடையே, நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசி இல்லை என்று மத்திய அரசின் அறிவிப்பால் நலிந்த பிரிவினருக்கு தடுப்பூசி கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது என தெரிவித்து, (GOI’s Vaccine Discrimination- Not Distribution- Strategy) என்று குற்றசாட்டியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்