அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி.. இறுதி சோதனையில் 30,000 தன்னார்வலர்கள் பங்கேற்பு.!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. தற்போது கொரோனாவைரஸ் சீனா மட்டுமல்லாமல் பலஉலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும், பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.

இதனால், கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக இறங்கி உள்ளன.  இதில், தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகள் தொடக்க கட்ட வெற்றியை ஈட்டியுள்ளன. சில நாடுகள் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பும், மாடர்னா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி ஏற்கனவே தொடக்ககட்ட சோதனைகளை முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பரிசோதனை நேற்று தொடங்கியது.

இதில், அமெரிக்கா முழுவதிலும் இருந்து 30 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவர்களை அனைவரையும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனையை எட்டியுள்ள நிலையில், இது பாதுகாப்பானதா..? என்பது இதுவரை உறுதியாகவில்லை. இந்த தடுப்பூசியின் முதற்கட்ட சோதனையில் பங்கேற்றவர்களுக்கு காய்ச்சல், தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி போன்ற சின்னச்சின்ன பக்க விளைவுகள் இருந்தாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan