அசாமில் மேலும் 6 பேர் பலி.! கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு.!

அசாம் மாநிலத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 814 பேருக்கு கொரோனா

By manikandan | Published: Jul 08, 2020 11:06 PM

அசாம் மாநிலத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 814 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்.

அஸாம் மாநிலத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 814 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 588 பேர் கவுகாத்தி நகரத்தை சேர்ந்தவர்கள்.

அசாமில் இதுவரை மொத்தம் 13,336 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தற்போது வரையில் 8,329 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான இறப்புகளில் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நான்கு பேரும், ஒருவர் தேஸ்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், மற்றொருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

Step2: Place in ads Display sections

unicc