விஜய் பட இயக்குநருக்கு கொரோனா.! உதவிய அஜித் பட தயாரிப்பாளர்.!

விஜய்யின் தமிழன் படத்தை இயக்கிய மஜித் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும்,

By ragi | Published: Jun 17, 2020 01:32 PM

விஜய்யின் தமிழன் படத்தை இயக்கிய மஜித் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அவரின் சிகிச்சைக்காக கே. ஜி. ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் பணம் செலுத்தி உதவியதாகவும் கூறப்படுகிறது.


கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி இரவு 12 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டது மட்டுமில்லாமல் சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2002ல் விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' என்ற படத்தை இயக்கியவர் மஜித். தற்போது இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனது சிகிச்சைக்கான பணத்தை மருத்துவமனையில் கட்ட முடியாமல் அவதி பட்டதால் திரையுலகை சேர்ந்த பலரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது பிரபல தயாரிப்பு நிறுவனமான கே. ஜி. ஆர் ஸ்டுடியோஸ் உரிமையாளரான ராஜேஷ் மஜித் அவர்களுக்கு சிகிச்சைக்கான பணத்தை செலுத்தி உதவியுள்ளார். இந்த கே. ஜி ஆர் ஸ்டுடியோஸ் தான் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc