முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா.. தனிமைப்படுத்திக் கொண்ட எடியூரப்பா!

கர்நாடகா முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான

By surya | Published: Jul 10, 2020 03:24 PM

கர்நாடகா முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாநில முதல்வர் எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

கர்நாடகாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 2062 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா படித்தோர் எண்ணிக்கை 28,877 ஆக அதிகரித்துள்ளது.

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் தாக்கும் கொரோனா, முதல்வர் அலுவலகத்தையும் விட்டுவைக்கவில்லை. கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அம்மாநில முதல்வர் எடியூரப்பா, தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

Step2: Place in ads Display sections

unicc