மகனுக்கு கொரோனா,நான் நலமாக இருக்கிறேன்- ப.சிதம்பரம் ட்வீட்

மகனுக்கு கொரோனா,நான் நலமாக இருக்கிறேன்- ப.சிதம்பரம் ட்வீட்

மகனுக்கு கொரோனா,நான் நலமாக இருக்கிறேன் என்று  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனிடையே அமைச்சர்கள் ,எம்எல்ஏக்கள் என அரசியல்  கட்சியினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகின்றது.அந்த வகையில் இன்று  சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை  அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில்  தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து கார்த்தி சிதம்பரத்தின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கார்த்தி சிதம்பரம் MP கரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார். நான் சிவகங்கைத் தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.