கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா – முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 3,347 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,79,922 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

மேலும், இன்று ஒரே நாளில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697 பேர் ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 57,879 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர், மாநிலத்தின் கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை காணொளி காட்சி மூலம் நாளை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், திருமண விழாக்களில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.